Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஸாகிர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவால் ஏற்பாடு செய்யப்படட்ட கிழக்கு மாகாணத்துக்கான மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை, கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மின்சார கணக்கின் பெயர், முகவரியை மாற்றுதல், மீற்றர், மின்கம்பங்களை மாற்றுதல், புதிய மின் இணைப்புகளை வழங்குதல், மின் அளவீட்டு முறைமையை மாற்றுதல், மின் பட்டியல், மின் தடைகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்தல், வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற பல சேவைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் றொசான் வீர சூரிய, கல்முனை மின்சார பிரதம பொறியியலாளர் ஏ. எம். ஹைக்கல், கிழக்கு மாகாண நுகர்வோர் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.எம்.தமீம் ஆகியோருடன் இலங்கை பொதுப் பயன்பாடு ஆணை குழுவின் உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026