2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முன்னாள் எம்.பியான செல்லையா இராசதுரை காலமானார்

Editorial   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai) சென்னையில் காலமானார்.

1927 ஜூலை 27 அன்று பிறந்த அவர், பாராளுமன்ற உறுப்பினராக 1956 முதல் 1989 வரை பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இவர், இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து மார்ச் 1960, ஜூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வந்தார்.

இராசதுரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X