Editorial / 2026 மார்ச் 20 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல். ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இரு யாசக குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போதைய புனித நோன்பு காலத்தில், வெளியூர்களிலிருந்து யாசகம் பெறுவதற்காக அதிகளவிலானோர் காத்தான்குடி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் கடைகளின் முன்பாகத் தங்கியிருந்து, பகல் வேளைகளில் யாசகம் பெற்று வருகின்றனர். அவ்வாறு தங்கியிருந்த இரு யாசக குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இம்மோதலில் ஈடுபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago