Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 06 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், வி.ரி சகாதேவராஜா, நிதர்சன் வினோத், தீஷான் அஹமட்
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரளவேண்டும் என கோரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று (05) பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, பொது மக்கள் ஒன்று திரண்டு போராடினர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடகிழக்கு தனியொரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது, மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் போராட்டத்தின் பொது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவில், நேற்று முதல் 10ஆம் திகதிவரை தொடர் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோவில்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.
போராட்டத்தில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி. கமலராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மாணவர் மீட்பு குழு தலைவர் செல்வராஜா கணேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.
திருகோணமலை
முற்றவெளி வெளி முன்பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
யாழ்ப்பாணம்
ஏ9 வீதியின் நாவற்குழி சந்தியில் போராட்டகாரர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
53 minute ago
1 hours ago