Janu / 2026 மே 04 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மதீனா பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர், ஓட்டமாவடி பகுதியிலுள்ள அவர்களது மகளின் வீட்டில் தங்கியிருந்த போதுவீட்டில் யாரும் இல்லாத நேரத்தை அறிந்து கொண்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டார் திரும்ப தங்களது வீட்டிற்கு சென்றபோது திருடர்கள் புகுந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மின் இணைப்பு வேலைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகள் (Wires) மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (02) அல்லது ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்திருட்டு சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எச்.எம்.எம்.பர்ஸான்
11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago