Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் நேற்று பிரதேச செயலக முன்வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என். கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் வி. பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் ஆர். சுபாகர், திட்டமிடல் பணிப்பாளர் ஹிசைன்டீன், நிர்வாக உத்தியோகத்தர் சோபிதா, முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன், திட்டமிடல் முகாமையாளர் சத்தியப்பிரியன், தெற்கு வங்கி சமுர்த்தி முகாமையாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சம்பிரதாய பூர்வமாக விற்பனை சந்தையைத் திறந்து வைத்தார். இதன்போது, சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன.
சமுர்த்தி வங்கியின் நடமாடும் வங்கி சேவை இடம்பெற்றதுடன், இங்கு வழங்கப்படும் பணத்தைக் கொண்டு, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ததையும் காண முடிந்தது.
வி. சுகிர்தகுமார்
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025