Super User / 2011 ஏப்ரல் 15 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தின் சிம்மாசன பிரசங்கம் ஆகஸ்ட் 12, 1960 இல் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அல்லது சமஷ்டி கட்சியை சந்தோஷப்படும் வகையில், அதன் தமிழ்மொழிபெயர்ப்பும் வாசிக்கப்பட்டது. மாவட்ட சபைகள் பற்றியோ தமிழ் மொழியை நிர்வாக, நீதி துறைகளில் பயன்படுத்துவது பற்றியோ, சிம்மாசனப் பிரசங்கத்தில் குறிப்பிடப்படாததால் தமிழரசுக் கட்சி விரக்தியடைந்தது.
சமஷ்டி கட்சி ஆதரவு தேவைப்பட்டாத அளவுக்கு அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்தமையால் தேர்தலுக்கு முன்னர் சமஷ்டிக் கட்சியுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எட்டிய புரிந்துணர்வை அமுல் நடத்த வேண்டிய கடப்பாடு இல்லையென அரசாங்கம் நினைத்தது போலும்.
ஆயினும் சமஷ்டிக் கட்சி பொறுமை காத்தது. விவாதத்தின்போது இந்தக் கட்சி அடக்கமாக நடந்துக் கொண்டது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வெளிப்படையான மோதலை தவிர்த்துக் கொள்வதும் மேலும் பேசுவதற்கான சூழலை பேணவுமே கட்சி இவ்வாறு நடந்து கொண்டது.
ஆயினும், அரசாங்கத்துடன் பேசுவதற்கான தன் முயற்சிகளை அரசாங்கம் உதாசீனம் செய்வதை சமஷ்டிக் கட்சி புரிந்துக் கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சமஷ்டி கட்சியுடன் மேலும் பேசும் மனநிலையில் இருக்கவில்லை. பிரதமருக்கும், சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் எழுதிய கடிதங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. தொலைபேசி அழைப்புகளுக்கு மரியாதை கிடைக்கவில்லை.
சிங்கள மயமாக்கல்
புதிய அரசாங்கம் பண்டாரநாயக்காவின் கொள்ளைகளை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கத்தில் இருப்பது தெரிந்தது. இதில் முக்கியமான விடயம், நிர்வாக, நீதித் துறைகளை முழு சிங்கள மயமாக்குதல் ஆகும். தமிழ் என்ற காரணி கருத்தில் எடுக்கப்படவே இல்லை.
தேர்தலுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் மேசைக்கு கீழ் இரகசியமாக காலால் தட்டும் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சமஷ்டிக் கட்சி, தேர்தல் முடிந்த பின் அதையிட்டு கவலைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சமஷ்டிக் கட்சிக்கும் இடையில் கூட்டு இருப்பதாக ஐ.தே.க. செய்த இனவாத பிரச்சாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்களை பாதித்தது. பலர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சாரத்தை நம்பினர்.
சமஷ்டிக் கட்சியுடன் எவ்வித புரிந்துணர்வு இல்லை எனவும், அக்கட்சியின் கோரிக்கைகளின் அடிப்படையில் சலுகை ஏதும் வழங்கப்படமாட்டாது என்பதையும் கட்சியின் சகல மட்டத்தில் உள்ளோருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக்கு இருந்தது. தனது சிங்களம் சார்ந்த நிலைப்பாட்டை கட்சி மாற்றிக் கொள்ளவில்லை எனவும் காட்ட வேண்டியிருந்தது.
கட்சியை விட்டு விலகிப் போனவர்கள் மீண்டு வந்தமை சிங்கள சார்பு கடும்போக்குக்கு மேலும் உரம் சேர்த்தது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிப்படையான சிங்கள பெருமிதவாதிகள் இவர்களின் மீள்வருகை கட்சியை முழு சிங்கள மயப்படுத்த விரும்பியோருக்கு பலம் சேர்த்தது. இந்த நிலையில் சமஷ்டி கட்சியுடனான தேர்தலுக்கு முந்திய உறவையிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெட்கப்படுவது போல இருந்தது.
இது இயல்பாகவே தமது அரசியல் எதிர்காலம் பற்றி தமிழ் மக்களுக்கு இருந்த அச்சத்தை மேலும் அதிகரித்தது. அரசாங்கம் 'சிங்கள மட்டும்' சட்டத்தை பெரியளவில் நாடு முழுதும் அமுலாக்கப் போகின்றது என்ற கவலையும் பயமும் தமிழர்களுக்கு உண்டானது.
இந்த பயத்தை அரசாங்கத்தின் இரண்டு அறிவித்தல்கள் மேலும் அதிகரிக்கச் செய்தன. இதில் ஒன்பது ஜனவரி 1, 1961 இலிருந்து நிர்வாகத்தின் சகல பிரிவுகளிலும் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்பதாகும்.
இரண்டாவது, இலங்கையின் சகல பகுதிகளிலும் சிங்களத்தை நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்பதாகும். 1959 இல் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்பட்டாலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அது காலாவதியாகி விட்டது. இப்போது அரசாங்கம் அதை மீண்டும் உயிர்பிக்க விரும்பியது.
இதையிட்டு ஏதாவது செய்தாக வேண்டுமென்று தமிழ் மக்கள் சமஷ்டி கட்சிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். சமஷ்டிக் கட்சி யூலை 1960 இல் நடந்த தேர்தலில் 218,653 வாக்குளை பெற்று 16 தொகுதிகளை வென்றது. இந்த கட்சி தன்னை தமிழ் மக்களின் சட்டப்பூர்வமான பிரதிநிதி என்று கருதியது. சமஷ்டிக் கட்சி இந்த அப்படையில், தமிழ் மக்களின் கவலைகளை உள்ளடக்கியதும் அனைத்து விடயங்களை கொண்டதுமான மனுவொன்றை தயாரித்தது.
மனு
இந்த மனு பண்டா - செல்வா ஒப்பந்தத்தையும் பண்டாரநாயக்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மொழி உபயோகத்துக்கான ஏற்பாடுகளையும் பூரணமாக அமுலாக்குமாறு கேட்டது. சமஷ்டிக் கட்சி பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் தமிழ் மொழி ஏற்பாடுகள் அமுலாக்கப்பட வேண்டுமெனவும் விரும்பியது.
இந்த மனுவில் தமிழ், முஸ்லிம் மக்களால் பேசப்படும் தேசிய மொழியென தமிழை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்க வேண்டும். சிங்கள பெரும்பான்மை காணப்படும் ஏழு மாகாணங்களிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உத்தியோக அலுவல்களை தமிழில் செய்வதற்கான ஒழுங்குகள் வேண்டுமெனவும் சமஷ்டிக் கட்சி கூறியது.
சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியாக்கப்பட்டதனால் இரண்டு வகையான தமிழ் அரசாங்க ஊழியர்களை உருவாக்கிவிட்டதாக இந்த மனு சுட்டிக் காட்டியது. 'சிங்களம் மட்டும்' சட்டத்துக்கு முந்தியவர்கள் ஒரு வகையினர் என்றும் பிந்தியவர்கள் இரண்டாவது வகையினர் என்றும் அது கூறியது.
'பழைய ஊழியர்' என கூறப்பட்ட முதல் வகையினர் ஆங்கிலத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அல்லாது விடின் அவர்கள் விரும்பினால் முழு நன்மையுடன் ஓய்வு பெற அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களை கட்டாயமாக ஓய்வு பெற வைக்கவும், இவர்களது சம்பள உயர்ச்சிகளை பதவியுயர்வுகளை மறுக்கவும் கூடாது எனவும் மனுவில் கூறப்பட்டது.
இரண்டாவது பகுதியினரான புதிய ஊழியர்களுக்கு சிங்கள தேர்ச்சி தேவையென்பதை சமஷ்டி எதிர்க்கவில்லை. ஆனால், சிங்கள தேர்ச்சியின் தேவையை பயன்படுத்தி தமிழர்கள் அரசாங்க சேவையில் சேர்வதை குறைக்கவோ தடுக்கவோ கூடாது என மனுவில் கூறப்பட்டது.
தமிழர்கள் சிங்களத்தில் தேர்ச்சி பெற நீண்டகலாம் வழங்கப்பட வேண்டும். தமிழ் பகுதிகளில் வேலை செய்ய வேண்டியிருக்கும் சில வகையான ஊழியர்களுக்கு சிங்கள தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
16 சமஷ்டிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்த மனு பிரதமர் திருமதி பண்டாரநாயக்கவுக்கு விலாசமிடப்பட்டது. அவருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படியும் கேட்கப்பட்டது. இது கிடைத்ததாக மிகச் சுருக்கமான கடிதம் மட்டும் அனுப்பப்பட்டது. நடப்பதை கண்டு கொள்வோம் என்று இல்லாது சமஷ்டிக் கட்சி வலுவான அழுத்தங்களை பிரயோகித்தது.
சமஷ்டிக் கட்சி தலைவர்கள், பிரதமருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களுக்கூடாக பல செல்வாக்குப் பிரயோகங்களை மேற்கொண்டனர். செல்வநாயகம், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். ஏனைய சமஷ்டி கட்சி தலைவர்கள், சிபிடி சில்வா, மைத்திரிபால சேனநாயக்க, டிபி இலங்கரத்ன, பி.பீ.ஜி. கலுகல்ல, சாம்.பி.சி. பெர்னாண்டோ பதியுதின் மஃமூத் ஆகியோரை அவர்களின் அலுவலகங்களில் சந்தித்தனர்.
அலரி மாளிகை
இந்த கூட்டு முயற்சியின் பலனாக அரசாங்கம் இறங்கிவந்தது. சமஷ்டிக் கட்சியின் தூதுக் குழுவுக்கும் பிரதமருக்குமிடையில் 8, நவம்பர், 1960
இல் ஒரு சந்திப்பு அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டது. சிறிமா தலைமை தாங்கிய குழுவில் அமைச்சர்களான சி.பி.டி. சில்வா பீலிக
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago