Super User / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)
ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.(6).jpg)
ஹெல்வீச்சியா அல்லது சுவிட்ஸர்லாந்து, இலங்கையில் பிறந்த 40000 - 42000 தமிழர்களின் வதிவிடமாக உள்ளது. கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரைவிட இந்த எண்ணிக்கை குறைவானது ஆகும்.
பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட எந்தவொரு மேற்கத்தைய நாட்டைவிடவும், சுவிட்ஸர்லாந்து தமிழர்கள் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்பு விகிதாசார ரீதியில் அதிகமானதாகும்.
புலிகளின் கோட்டை
அண்மைக் காலத்தில் சுவிஸ் வாழ் தமிழர்கள் புலிகளின் இலட்சியத்திற்காக அதிகளவான பணவலு, மனிதவலு, சிரமவலு, என்பவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறான பண்பு ரீதியான பங்களிப்பு சுவிட்ஸர்லாந்தை ஐரோப்பாவில் உள்ள புலிகளின் கோட்டை என கருத வைத்தது.
இந்த பின்னணியில் பார்க்கும்போது சுவிஸ் அதிகாரிகளின் அண்மைக்கால நடவடிக்கை, சுவிடஸர்லாந்தில் புலிகளின் எதிர்காலம் கெட்ட காலமாக அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக உள்ளது. புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க பல தமிழர்கள் முன்வந்துள்ளது போல தோன்றுவதால் புலிப் பப்படம் சுவிட்சர்லாந்தில் நொறுங்கிப் போவதாக தெரிகின்றது.
சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் தற்போதைய தலைவர் விஜயரட்ணம் சிவனேசன் அல்லது ரகு அல்லது ரகுபதி, இவருக்கு முன் தலைவராக இருந்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிட்ஸர்லாந்து புலி நிதிப்பொறுப்பாளர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.
சுவிஸ் அதிகாரிகள் முக்கிய புலிச் செயற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் வெற்றி பெறுவார்களாயின், சுவிட்ஸர்லாந்தில் உள்ள புலிகளின் அமைப்பு நிச்சயம் பலவீனப்படும், அத்துடன் அங்குள்ள தமிழ் மக்கள் மீதான புலிகளின் பிடியும் தளரும்.
இவ்வாறான நீதி விசாரணை வெற்றி பெறுவதற்கு புலிகளால் பாதிக்கப்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமானது ஆகும்.
இந்த முறை புலிச் செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதற்காக பல தமிழர்கள் அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்பதாக தெரிகிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தமிழர்கள் தயங்கினர். இந்த முறை இது வித்தியாசமாக உள்ளது.
இவ்வாறு பலர் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க விரும்புவதை பற்றிய விசேட அம்சம், இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட புலி ஆதரவாளர் அல்லாதவர்களாக இல்லாமல், புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்களாக இருப்பதுதான். புலியோடு சேர்ந்திருந்தவர்களே புலிகளுக்கு எதிராக செயற்பட வந்தமையால் சுவிட்ஸர்லாந்து புலிக் குமிழி உடைந்து போயிற்று.
இவ்வாறு வழமைக்கு மாறாக நடப்பதற்கு புலிச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளே காரணமாயின. நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில், புலிகளின் ஆட்கள் தமது ஆதரவாளரக்ளின் பெயரில் வங்கிக் கடனை பெற்று அந்த பணத்தை கையாடியதுடன் கடனையும் கட்டாமல்விட்டு விட்டார்கள்.
இவ்வாறு கடன் பெற்றுக் கொடுத்தவர்கள் இப்போது மிகவும் அந்தரமான ஆபத்தான நிலையில் உள்ளனர். கடன் கொடுத்த நிறுவனங்களும் சங்கடமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் புலிகளின் நம்பி;க்கைக்கு உரித்தாயிருந்த ஆதரவாளர்கள், அதிகாரிகள
2 hours ago
5 hours ago
9 hours ago
ajan Saturday, 19 February 2011 06:54 PM
உங்களுடைய பப்படம் எப்போது நொறுங்க போகிறதோ? நல்ல கற்பனை வாதி.
தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையை குழப்பத்து பாடுபடும் பல தமிழர்களின் இவரும் ஒருவர். ஆனால் அது இவர்கள் எதிர்பார்ப்பது போல நடக்காது என்பது உறுதி.
Reply : 0 0
xlntgson Sunday, 20 February 2011 09:24 PM
ajan, ஏன் புலம் பெயர்ந்தீர்கள்? நாட்டில் பிரச்சினை தீர்ந்து விட்டதென்றால் கொஞ்சம் தாளத்தை மாற்றிப் போட்டால் என்ன? சுவிஸ் போன்ற நாடுகள் எப்போதும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக இருக்குமா?
மக்கள் மீது 'கருத்து கணிப்பு' ஒன்றை திணிக்க முயலலாமா, அதை விட ஊடகங்கள் பிழைப்புக்காக பேசியதையே பேசுவதிலோ கருத்துகளை திணிக்காமல் வெளியிடுவதிலோ தவறில்லையே! ஏசிப் பேசிக் கொண்டிருப்பதை விட மாற்றுக் கருத்தை வெளியிடலாமே! பிரிவினையைத் தூண்டாதவரை அதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் ஏற்புடைய மனம் இருக்குமே! என்ன நான் சொல்வது, படுதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago