Menaka Mookandi / 2011 ஜூன் 07 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் ஜூன் 3ஆம் திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது)
(என்.சத்தியமூர்த்தி)
அண்மையில் நடந்து முடிந்த 'பயங்கரவாதத்தின் மீதான யுத்தம், இலங்கை அனுபவம்' என்ற பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் அல்லது தற்போதும் சேவையில் உள்ள இராணுவ தளபதிகள் கூறிய விடயங்கள், இதனை நிதிப்படுத்தியதன் மூலம் சீனா காட்டிய அக்கறை என்பவை விரைவில் மறக்கப்படக் கூடும்.
ஆனால், கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 'நீதிமன்றில் உள்ள விடயம்' எனக் காரணம் கூறி பதில் கூற மறுத்த போது இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் லோறன்ஸ் ஸ்மித், அவர் சார்பில் பதில் கூறியது இலங்கையராலும், விமர்சகர்களாலும் மீண்டும் மீண்டும் பேசப்படக் கூடியதாகவுள்ளது.
.jpg)
கேணல் ஸ்மித், இரண்டு விடயங்களைப் பற்றிக் கூறினார். இரண்டுமே அண்மைக் காலம் வரை அவரது அரசாங்கத்தினால் முரண்பாடான கருத்தை வெளிப்படுத்தியவையாக நம்பப்பட்டவை. யுத்தத்தின் இறுதி தருணத்தில் சரணடைதல் பற்றி பேசுவதற்கு புலிகளின் பொலிஸ் பொறுப்பாளரான நடேசனோ அல்லது கேபி என கூறப்படும் குமரன் பத்மநாதனோ பொருத்தமானவர்கள் அல்லர் என அவர் கூறினார்.
ஸ்மித்தின் கருத்துப்படி பதவி வழியாக மேற்கூறிய இருவரையும்விட, களத்தில் போராடிக்கொண்டிருந்த தளபதிகளே இதுபற்றி பேச பொருத்தமானவர்களாக இருந்தனர்.
சரணடைதல் பற்றி பேசியபோது வேலுப்பிள்ளை பிரபாகரனால் அதிகாரமளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக கேபி இருந்தார் என்பது யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தோன்றவில்லை போலவுள்ளது.
நடேசன் பொலிஸ் பொறுப்பாளர் மட்டுமல்ல, தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப் படையின் குண்டுத் தாக்குதலில் இறந்த பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்.
இதைவிட முக்கியமான விடயம், வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஆயுதப்படைகள் மீதான விமர்சனங்களை இவர் சந்தேகப்படுவதாக அறிவிக்கப்படுவதாகும். யுத்தகள செய்திகள் அநேகமாக இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆள் வழி தகவலாகவே பெறப்படுகின்றன.
எனவே இவை பிழையானதாகவும் இருக்கக்கூடும். ஒருவன் கறுப்பாக சத்தியெடுத்தான் என்ற செய்தி ஐந்தாவது, ஆறாவது ஆளிடம் சென்றடைந்த போது அவர் காகம் காகமாக சத்தியெடுத்தான் என திரிபடைந்து விட்டதாக தர்க்கவியலில் சுட்டிக்காட்டப்படுவதுண்டு.
இல்லாவிட்டாலும் கூட, கேணல் ஸ்மித் சரணடைதல் விடயத்தில் கூறியதாக கூறப்படும் விடயத்தில் உண்மையுள்ளது. சூசை அல்லது பொட்டம்மான் சரணடைதல் பற்றி பேசுவதால் 'அடி நிலையிலிருந்து பேச வல்லவர்கள் என்ற கருத்தை புறக்கணித்து பார்த்தாலும் இந்த சரணடைதல் முயற்சி முன்னர் விடுதலைப் புலிகள் வெளிப்பகட்டுக்கு காட்டிக்கொண்டிருந்த வளைந்து கொடுக்காத தன்மையின் போலித்தனத்தை போட்டுடைத்து விட்டது.
கடந்தகால வெற்றிகளால் மதிமயங்கிப் போன பிரபாகரன், இராணுவ அரசியல், இராஜதந்திர பலம் தொடர்பில் இலங்கை அரசினதும் விடுதலைப் புலிகளினதும் பலங்களை ஒப்பிட்டுப் பார்க்க தவறியமை வேறு விடயம்.
பிரபாகரன், இந்தியாவின் தலையீட்டை கோரும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அதிகாரம் வழங்கியிருந்தார் என கூறப்படுகிறது. ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இதுவரை கைது செய்யப்பட்டாமல் இருக்கும் ஒரேயொரு நபரான கேபி தான் அவரது தெரிவாக இருந்தது. இது பிரபாகரனின் அறியாமையை அல்லது திமிரை அல்லது இரண்டையும் வெளிக்கொணர்கிறது.
யுத்தம் முடிவதற்கு சில வாரங்களுக்கு முன், தமிழர் துயரம் பற்றியும் புலிகளின் வழிமுறைகள் பற்றியும் சொல்ல வேண்டிய வியடங்களை அறிந்திருந்த சிலர், இந்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாமே உரித்துடையவர்கள் எனக் கூறினர். இவர்களில் எவரும் இந்திய முறைமை பற்றிய அடிப்படைகளைக் கூட அறிந்திருக்கவில்லை.
நான்காவது ஈழ யுத்தத்தில் அப்படியான ஒரு பிரதான கட்டத்தில் அவர்கள் பற்றி இந்திய அரசாங்கத்துக்கு எவ்வித மதிப்பு இருக்கவும் இல்லை. பேச்சுவன்மையும் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதுமே அவர்களுக்கு கை வந்த கலைகளாக காணப்பட்டன.
நுட்பமாக கையாள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிரான தன்மைகளே இங்கு காணப்பட்டன. அந்தரப்படுவதும் கண்டபடி முடிவுகள் எடுப்பது விடுதலைப் புலிகளின் கடைசிநேர ஆயுதங்களாயின. சரணடைதல் விடயத்தில் ஆரம்ப நடவடிக்கை எடுப்பதில் கூட தோல்விக் கண்டபோது அது வெற்றிப்பெறவேண்டிய தேவைப் பற்றி பேசத் தேவையில்லை.
கேணல் ஸ்மித் கூறியதாக கூறப்படுபவரின் அவரால் மாநாட்டில் கூறப்பட்ட விடயங்களா என அறியப்பட வேண்டும். அரசுக்கு சார்பான அதே சமயம் பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கைக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராடும் மூன்றாம் உலக நாடுகளில் மனித உரிமைக்கும் இடையில் நடுவழியை கடைப்பிடிக்கும் தனது கயிற்றில் நடக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிவிட்டதா என தீர்மானிப்பதற்கும் இது அவசியமாக உள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்த உதவி இராஜாங்க செயலாளர் றொபர்ட் பிளேக்குக்கு அடுத்ததாக கருத்துக் கூறியவராக கேணல் ஸ்மித் உள்ளார். இதுவும் தருஸ்மன் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா இலங்கையின் பக்கம் சாய்வது போன்ற தோற்றத்தை கொடுத்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளுக்குமிடையில் உள்ள கருத்து வேறுபாடு வெளித் தெரிகின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுதல், மனித உரிமைக்கான போராடுதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவின் அணுகுமுறைக்கிடையிலும் இடைவெளி தெரிகின்றது. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே.
நிலைமை இப்படியிருக்கையில் இலங்கை, சற்று நிம்மதி அடையலாம். ஆனால் மேற்கு நாடுகள் மனிதாபிமான தலையீடு என்பதன் வீச்சை உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைவரம் என்பதையும் அடக்குமாறு விரிவாக்க தீர்மானித்துள்ளமை தெரிகிறது.
தாம் தூதுவராக கடமையாற்றும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றிக் கருத்துக் கூறியவர் ஜேர்மன் தூதுவரான ஜேன்ஸ் புளொட்னர் மட்டுமல்ல.
ஆனால் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்தில் ஊழியர் எதிர்ப்பை கையாண்டதில் பொலிஸின் மிகையான பலப்பிரயோகம் பற்றி கூறிய கருத்தும் இது பற்றி வெளிவிகார அமைச்சின் தலைமையை புறக்கணித்துவிட்டு பாதுகாப்பு செயளார் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியமையும் ஜேர்மன் முதலீடு பற்றிய அக்கறையால் நிகழ்ந்தது அல்ல.
ஜேர்மன் தலையீடு இறைமையுடன் தொடர்பானது. அதேவேளை, கேணல் ஸ்மித்தின் தாக்கத்தை 'வைகோ' மீது பிரயோகத்தால் சண்டை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் அவருக்கு கிடைத்த தகவல்கள் இரண்டாவதோ, மூன்றாவதோ, நான்கதோ ஆளுக்கூடாக வந்ததல்ல. அது 15 ஆவது ஆளுடாகவோ அல்லது 50 ஆவது ஆளுக்கூடாகவோ கிடைத்ததாக இருக்கலாம்.
(தமிழில். ந. கிருஷ்ணராசா)
43 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
8 hours ago