A.P.Mathan / 2013 ஜனவரி 21 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவராக அவருக்கு "முடிசூட்டு" விழா அரங்கேறுவதற்கான முன்னோட்டமே இப்போது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள துணை தலைவர் பதவி. 1885இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி 58ஆவது தலைவர். அவருக்கு ராகுல் காந்தி இப்போது துணை தலைவர். இதற்கு முன்பு இரு துணை தலைவர்கள் இப்படி காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்டார்கள். ஒருவர் அர்ஜூன் சிங். இன்னொருவர் ஜிதேந்திர பிரசாத். இந்த இருவருமே பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகும் அதிர்ஷ்டம் அடையப் போகிறவர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு கட்சியின் மற்ற முன்னணித் தலைவர்கள் "புகழ்மாலை" சூட்டவில்லை. ஆனால் இந்த இளவரசர்தான் அடுத்த காங்கிரஸ் தலைவர் என்பதால் கட்சி முன்னோடிகள் முண்டியடித்துக் கொண்டு "வாழ்த்துரைகளை" பூமாலைபோல் கோர்த்து ராகுல் கழுத்தில் போட்டிருக்கிறார்கள்.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago