A.P.Mathan / 2014 மே 19 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய மக்கள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலை குலுங்க வைத்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகித்த பாரதீய ஜனதாக் கட்சி மட்டுமே 282 எம்.பி.க்களைப் பெற்று 30 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தனித்து ஆட்சி அமைக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் போட்டியிட்ட வாரணாசி, வதோதரா ஆகிய இரு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள வாராணாசியிலும், குஜராத்தில் உள்ள வதோதராவிலும் மோடி வெற்றி பெற்றிருந்தாலும், குஜராத் மக்கள் அவருக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த தொகுதியில் பதிவான 11.61 லட்சம் வாக்குகளில் 8.45 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ராஜ்ய சபை மூலம் எம்.பி.யாகி பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன்சிங். இப்போது ஒரு தொகுதிக்கு இரு தொகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி இந்தியப் பிரதமராகிறார்.5 hours ago
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Mar 2026