A.P.Mathan / 2015 ஜனவரி 07 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் அடிக்கடி கிளம்பும் “ராஜினாமா” புரளி அக்கட்சி தொண்டர்களை அலைபாய வைக்கிறது. அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் ஏறக்குறைய நடந்து முடிந்து விட்டது. 65 மாவட்டச் செயலாளர்களில் 60 பேர் உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு பெற்று வருகின்ற ஜனவரி 9-ம் தேதி பொதுக்குழு கூடவிருக்கிறது. இந்த குழுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான செயல்திட்டத்திற்கு வழி வகுக்கும். தேர்வு பெற்றுள்ள மாவட்டச் செயலாளர்கள் பெரும் மெஜாரிட்டியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான். ஒரேயொருவர் அதுவும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமாரி தி.மு.க. மாவட்டச் செயலாளர் மட்டும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஆதரவாளர். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அறவே ஒரங்கட்டப்பட்டு விட்டார்கள். கிட்டத்தட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மு.க. ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026