Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 04 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமையப் பெற்றுள்ளதே, இந்த ஏழு வெந்நீரூற்றுக்கள் ஆகும். சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் இவையும் பிரதான இடத்தை பிடித்துள்ளன என்றே கூறவேண்டும். இவற்றின் சிறப்பம்சம் யாதெனில், ஒவ்வொரு கிணறுகளும் வெவ்வேறு வெப்பநிலையுடன் விளங்குவதோடு எப்பொழுதுமே இவற்றில் நீர் வற்றுவதே இல்லை.
இத்தகைய சிறப்புக்களைகொண்டு விளங்குகின்றமையினாலேயே, இப்பகுதியை உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட தவறுவதே இல்லை. இந்த வெந்நீரூற்றுக்களை பார்வையிடவும் மற்றும் இவற்றில் நீராடுவதற்கும் கட்டணமுறைப்படி அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த ஏழு கிணறுகளிலும் நீராடுவதினால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளுர்வாசி மக்களிடையே நிலவி வருகின்றது. ஒவ்வொரு கிணறுகளும் 3 மற்றும் 4 அடி ஆழம் உடையவையாகும். அத்துடன் இப்பகுதியை சூழ விகாரையும் கோயிலும் காணப்படுவதினால், இங்கு அமைதி கட்டாயமாகப் பேணப்படுகின்றது. ஒவ்வொருவரும் நிச்சயமாக சென்று பார்வையிட வேண்டிய இடங்களில் இந்த ஏழு வெந்நீர் கிணறுகளும் முக்கியமானவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago