2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் மரணம்

S.Renuka   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோயி​லில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் 9 பெண்​கள் உயி​ரிழந்​துள்ளதுடன், பலர் காயமடைந்​து, அவர்​களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்​ள சம்பவம் ஒன்று பிஹாரில்  இடம்பெற்றுள்ளது. 

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்​டம், மேக்ரா கிராமத்​தில் அமைந்துள்ள ஷிதாலா தேவி கோயிலில், ஷிதாலா அஷ்ட​மியை ஒட்டி இந்த  செவ்வாய்க்கிழமை (31) அன்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்துள்ளனர். அப்​போது, பக்​தர்​கள் முண்​டியடித்​த​தால் கூட்ட நெரிசல் ஏற்​பட்​டே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து முதல்​வர் நிதிஷ் கு​மார் சமூக வலைத்​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், ஷிதாலா தேவி கோயில் கூட்ட நெரிசலில் பக்​தர்​கள் உயி​ரிழந்​திருப்​பது மிக​வும் வேதனையளிக்​கிறது. அவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். உயி​ரிழந்​தோர் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதி​யில் இருந்து ரூ.4 லட்சம், முதல்​வர் நிவாரண நிதி​யில் இருந்து ரூ.2 இலட்​சம் என மொத்​தம் ரூ.6 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும். காயமடைந்தவர்கள் விரை​வில் குணமடைய பிரார்த்​தனை செய்கிறேன் என தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​த்தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “நாளந்தா மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்து மிகுந்த வேதனையளிக்​கிறது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 ஆயிரம் இழப்​பீடு வழங்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார். பிஹார் பொலிஸ் தலை​வர் (டிஜிபி) வினய் குமார், கூட்ட நெரிசல் ஏற்பட்ட கோயிலை நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​துள்ளார்.

பின்​னர் அவர் நிருபர்​களிடம் கூறும்​போது, "அம்​மனை வழிபட 25,000 பேர் வரிசை​யில் காத்​திருந்து உள்​ளனர். கோயி​லின் கருவறை பகு​திக்கு செல்​லும் படிக்​கட்​டு​கள் சரி​யாக இல்​லை. கூட்டம் முண்​டியடித்​த​போது பக்தர்​கள் வழுக்கி விழுந்து உயிரிழப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தின் அதி​காரி சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு உள்​ளார். விபத்து குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தப்​படும்" என்று தெரி​வித்​துள்ளார்.

நாளந்தா மாவட்ட எஸ்​.பி.பாரத் சோனி கூறும்​போது, “கோ​யில் கூட்ட நெரிசல் தொடர்​பாக சிறப்பு புல​னாய்வு குழு அமைக்கப்பட்டு உள்​ளது. சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்து கூட்ட நெரிசல் எவ்​வாறு ஏற்​பட்​டது என்​பதை கண்​டறிவோம். தவறிழைத்த அனை​வர் மீதும் கடுமை​யான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விபத்​தில் காயமடைந்த பங்​கஜ் குமார் கூறும்​போது, “அம்​மனை வழிபட நான் 3 மணி நேரம் வரிசை​யில் காத்​திருந்​தேன். கோயில் அருகே செல்​லும் போது காலை 9 மணி அளவில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​டது. ஒரு​வர் மீது ஒரு​வர் விழுந்​தனர். மு​திர்​வயது பெண்​கள் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தனர். என் மீது சுமார் 20 பேர் விழுந்தனர். இளம்​வயது என்​ப​தால்​ நான்​ கா​யங்​களு​டன்​ உயிர்​ தப்​பினேன்" என்​றார்​.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .