2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘அலைபேசிகளைச் சோதித்தால் சூத்திரதாரிகள் அகப்படுவர்’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அலைபேசிகளை சோதித்துப் பார்த்தால் தெரியும்” என, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். 

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடையுத்தரவு விதிக்கப்பட்ட 30 பேர் மறைந்திருந்து, கலவரத்தை தூண்டி விட்டுள்ளனர். அவர்களை அனுப்பியது எவரென்று எல்லோருக்கும் தெரியும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று அறியவேண்டுமாயின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அலைபேசிகளை சோதித்துப் பார்த்தால் தெரியும் என்றார். 

முன்னைய ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு இவ்வாறான சூழ்சிகளை செய்து வருகின்றனர்’ என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .