2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘இருண்ட யுகத்தை திருப்பி, மக்கள் அரசாங்கம் விரைவில் மலரும்’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், இருண்டு போயிருக்கும் யுகத்தை திருப்பி, எதிர்காலத்தில் மக்கள் ஆட்சியை உருவாக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

தன்னுடைய பேஸ்புக்கில், பொதுமக்கள், நேற்று (08) கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  கேள்வி: மக்களுக்கு புதிய அரசாங்கத்தை எப்போது பெற்றுக்கொடுப்பீர்கள்? 

பதில்: நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் ஒன்றாக ஒன்றிணைந்தால் மக்களின் அரசாங்கத்தை உருவாக்குவது பெரிய விடயமல்ல.  

கேள்வி: எங்களுக்கு தெரியாமல் எங்கள் மாவட்டத்துக்கு புத்தளம் மாவட்டம் மற்றும் ஏனையத் தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் சமூகமளித்து குழுக்களை நியமிக்கின்றனர். எங்களுக்கு அறிவிப்பது இல்லை: நாங்கள் என்னச் செய்வது? நாங்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். 

பதில்: எனக்கு தெளிவுப்படுத்தியமைக்காக மிகவும் நன்றி, இந்த விவகாரம் தொடர்பில், குறிப்பிட்ட தலைவர்களைத் தெரிவுப்படுத்தி, மிகவிரைவாக தேவையான நடவடிக்கையை எடுக்கின்றேன்.  

கேள்வி: ஆசிரியப் பரீட்சையில் சித்தியெய்திய, வேலையற்ற பட்டதாரிகளுக்கு எப்போது தொழில் பெற்றுக்கொடுக்கப்படும். 

பதில்: இந்த விவகாரம் தொடர்பாகவும், சிரேஷ்ட உறுப்பினர்களை தெளிவுப்படுத்தி, விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிசமைப்பேன்.  

கேள்வி: ஹம்பாந்தோட்டை மக்களின் தாய்மண் மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றை, சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் புதிய நிலைமை என்ன? இந்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதா? இல்லையேல், விற்பதற்கு முடிவெடுத்துள்ள ஆட்சியாளரின் எண்ணம் கைவிடப்படும் வரையிலும் முன்னெடுக்கப்படுமா? 

பதில்: இது சீனாவுக்கு அல்லது அபிவிருத்திக்கு எதிராகவோ முன்னெடுக்கப்படும் போராட்டமல்ல. எங்களுடைய அரசியல் தூரநோக்கத்தின் பிரகாரம் மக்களின் வளம், வெளிநாட்டுக்கு கொடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதனையே நாங்கள் எதிர்க்கின்றோம். எமது முன்னோரின் இடங்களை, எக்காரணத்தைக் கொண்டும் விற்பதற்கு இடமளிக்கமாட்டோம். எங்களுடைய போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி, முன்னோக்கி நகர்த்துவோம்.  

கேள்வி: இவ்வாறு சென்றால், இந்த மக்களாட்சி எமது நாட்டை 88-89 யுகத்துக்கு மீண்டும் கொண்டுசென்றுவிடும். இந்த ஆட்சியை விரட்டியடித்ததுக்கு பரிகாரம் இல்லையா? 

பதில்: ஏன் இல்லை. மக்களால் மட்டுமே ஆட்சியை மாற்றமுடியும். இந்த இருண்ட யுகத்தை மீண்டும் திருப்புவதற்கு முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .