2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

1998இல் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட‘வலம்புரி’ கிடைத்தது

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

1998ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறைக் கடலில் மூழ்கிய, கடற்படையினருக்குச் சொந்தமான 'வலம்புரி' என்ற கப்பல், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

கடற்படை நீர்மூழ்கி வீரர்களால், இந்தக் கப்பல், திங்கட்கிழமை (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குறித்த கப்பலில், கடற்படையினர் 20 பேர் பயணித்துக்கொண்டிருந்த போதே, விடுதலை புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானது. இதன்போது, அதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர். 

யுத்தம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த கப்பலை தேடுவதில் கடற்படையினர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் எட்டுப்பேர், கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட தேடுதலின் பின்னர், இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

குறித்த கப்பலின் சிதைவடைந்த பாகங்கள், கடலின் அடிப்பகுதியில் உள்ளதாக அறிவித்துள்ள கடற்படை, கப்பலின் ஐந்தில் ஒருபகுதி, கடலுக்குள் மணலில் புதையுண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.    

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .