2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'இலங்கைக்கு அக்கினிப் பரீட்சை'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19ஆவது சார்க் மாநாடு தொடர்பில், இலங்கை நடந்துகொண்ட விதம் பிரச்சினைக்குரியது என, ஒன்றிணைந்த எதிரணி, சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 'சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று, இலங்கை அரசாங்கம் விடுத்த அறிவிப்பானது, இந்தியாவை சந்தோஷப்படுத்துவதற்காகும்' என்றார்.

சார்க் மாநாடு தொடர்பில், இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைக்கு விடுக்கப்பட்ட அக்கினிப் பரீட்சையாகுமெனவும் குறிப்பிட்ட கம்மன்பில, இலங்கையின் இராஜதந்திரச் செயற்பாட்டின் முட்டாள்தனமான முடிவொன்றையே, அரசாங்கம் எடுத்துள்ளதென்றும் சுட்டிக்காட்டினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .