2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'இவ்வருடத்தில் தேர்தலே இல்லை'

Gavitha   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'இவ்வருடத்தில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது' என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்; நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர், எல்லை நிர்ணய சபையின் பணிகள் பூர்த்தியாகாமல் உள்ளமையினால், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது' என்றார் 'ஜனாதிபதி நினைத்திருந்தால், ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவுடனேயே, நாடாளுமன்றத்தையும் உள்ளூராட்சி சபைகளையும் கலைத்துவிட்டு, அன்றே தேர்தலை வைத்திருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர், கட்சியின் கோட்பாடுகளுக்கோ கொள்கைகளுக்கோ புறம்பாகச் செயற்படவில்லை. தற்போதும்  அவ்வாறே செயற்படுகின்றார்' எனத் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம், இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. எனவே, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு, கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .