Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து என்றும் தன்னைக் கொலை செய்துவிட்டு, அதனை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே, அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, மாவை
எம்.பியால், நேற்றுத் திங்கட்கிழமை, சம்பந்தனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தி, விசாரணைகள் மேற்கொண்டு, அவ்வாறு முயற்சிகள் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அவரின் உயிர்ப் பாதுகாப்புக்குப் போதுமானளவு பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும். அனைத்தையும் காலதாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago