2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘எம்.பி பதவி கிடைக்குமா, கிடைக்காதானு தெரியாது’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.பிறின்சியா டிக்சி

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமானம் செய்துகொள்வேன் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல், தனக்கு இதுவரை கிடைக்கவில்லையென, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, நேற்றுப் பிற்பகல் தெரிவித்தார்.

  எம்.ரி.ஹசன் அலி, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பியாக இன்றையதினம் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பில் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம்தான் வினவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

எனினும், இவ் விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அலைபேசிக்கு பலமுறை தொடர்பினை ஏற்படுத்தியும் அது கைகூடவில்லை.  

முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில், கடந்த 2ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .