2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

2017க்கான பாதீட்டில் கடன்களைச் செலுத்தவே அதிக ஒதுக்கீடு

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட (பாதீடு) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை, இம்மாதம் 19ஆம் திகதியன்று அல்லது அதற்கு மறுதினமான 20ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  

இந்நிலையில், வரவு - செலவுத் திட்டம் தொடர்பான அடிப்படை வரைவொன்று, அமைச்சரவையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, அமைச்சர் கருணாநாயக்க குறிப்பிட்டார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன் மற்றும் கடன் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காகவே, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.  

அத்துடன், புதிய வரித் திருத்தட் சட்டமூலத்தினூடாக, இதுவரையில் 11 சதவீதமானக் காணப்பட்ட பெறுமதி சேர் (வற்) வரியினை, 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் கூறினார்.   

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .