2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘குண்டர்களை இறக்கியதைக் கண்டேன்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிரோஷினி

ஹம்பாந்தோட்டை தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி, பிரதமர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, லொறிகளிலிருந்து குண்டர்கள் இறங்கியதைக் கண்டேன் என்றும் தெரிவித்தார்.  

பிவிதுறு ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கயைில், 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில், அவர் இதுவரை இந்நாட்டு மக்களின் கைகளுக்கு எதனைக்கொடுத்துள்ளார் அல்லது இதுவரை காலமும் செய்த பிரயோசனமான வேலைத்திட்டங்கள்தான் என்ன?” என்றும் வினவினார். 

“மேலும், தனது வெற்றியானது 18ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட்டதற்கு ஒப்பான வெற்றி என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  

“ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வை நிறுத்த அங்கு யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தமது பூர்வீக நிலங்களை யாருக்கும் விற்க வேண்டாம் எனக் கோரியே, பாதையில் அமர்ந்து பிக்குகளுடன் இணைந்து மக்கள் பிரித் ஓதிக்கொண்டிருந்தனர். பிரித் ஓதிக்கொண்டிருந்தவர்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியது பொலிஸாரே. அதன்பின்னரே அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அதன் பின்னர், மக்களை அடக்குவதற்கு லொறிகளில் இருந்து மனித படுகொலையாளிகள் இறக்கப்பட்டனர். இதனை நான் பார்த்தேன். இறுதியில் அம்மக்கள் மீதே பலி சுமத்தப்பட்டது” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறி வருகின்றனர். ஜனாதிபதி ஒன்றை கூறினால் பிரதமரும் அமைச்சர்களும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். இப்படி நிலைமை இருந்தால் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதியை எவ்வாறு நம்புவார்கள்?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .