2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'கழிவறையில் செய்வதை உணவறையில் செய்தால் அது தவறு'

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போன ஆட்கள் அலுவலகம் பற்றிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்துக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடும் அதிருப்தியை தெரிவித்தார்.

 'கழிவறையில் செய்வதை உணவறையில் செய்தால் அது தவறு' என்று சுட்டிக்காட்டிய அவர்,  மதிப்புக்குரிய உறுப்பினர்கள் என்று அழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தினுள் நடந்துக் கொள்ளுமாறும் எம்.பி.க்களை வலியுறுத்தினார்.

அத்துடன், அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடம் நாடாளுமன்றம் என்றும் லிப்டன் சுற்றுவட்டம், கோட்டை ரயில் நிலையம், ஹைட் பார்க் போன்ற இடங்கள் அதற்கு இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X