2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘சம்பந்தனுக்கு தகுதியில்லை’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்   

“இலங்கையின் கடந்த ஆட்சிக்காலத்தின் போது மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்று கூறுவதற்கு, எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை” என்று, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.  

கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பிலான கோப் அறிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன், “இலங்கையை இதுவரை ஆட்சி செய்த அரசியலில், ஊழல் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவ்வாறு ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.   

இது தொடர்பாக, நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய டிலான் பெரேரா, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,   

“எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்ததைப் போன்று, விசாரணைகள் முன்னெடுப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம். ஒருவரைக் கூட குற்றவாளியாக அடையாளம் காட்ட முடியவில்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், இது பற்றி கதைப்பதற்கு, அவருக்கு எந்தவொரு தகுதியும் கிடையாது.  

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுடன், தனிப்பட்ட ரீதியில் அவருக்கு தொடர்பில்லை என்றாலும், அவரது கட்சியினர், கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களாவர். அப்போது, அமைதியாக இருந்த அவர், தற்போது, நாட்டின் மோசடி குறித்து கதைக்கின்றார்” என்று அவர், மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .