2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். 

'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. 

இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி இத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்தச் சேவையினூடாக சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.  

தற்போது இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் சுமார் 44,677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தொலைபேசியினூடாக 22,947 முறைப்பாடுகளும், தபால் மூலமாக 11,636 முறைப்பாடுகளும், இணையத்தளங்களூடாக 10,094 முறைப்பாடுகளும், கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

கிடைக்கப்பெற்ற பிரச்சினைகளில் 8,092 பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. முறைப்பாடுகளில் 1,062 முறைப்பாடுகள் இதுவரையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது 14,976 முறைப்பாடுகளுக்கான தீர்வுகளுக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் 19,624 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. 

சுமார் 923 முறைப்பாடுகள் தீர்வு காண முடியாத நிலையிலுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .