2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

27 தடவைகள் பறந்துள்ளார் யோஷித

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, கடற்படை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய காலக்கட்டத்தில் 27 தடவைகள், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.

பயிற்சி, றகர் விளையாட்டு மற்றும் தனிப்பட்ட விஜயங்களுக்காகவே இந்தப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார் என

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்து தகவலளித்த இராஜாங்க அமைச்சர், 'மேற்படி கடற்படை உத்தியோகத்தர், உத்தியோகத்தர், ஜனாதிபதி பாதுகாப்பு சேவையில் 2012 மார்ச் 21ஆம் திகதியன்று இணைத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் கூறினார்.

'கடற்படை உத்தியோகஸ்தராக அவர் கடமையாற்றிய காலத்தில், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கடற்படையிடம் இல்லை. இவ்வாறு கடமையாற்றுதல் நிறுவன ஒழுக்காற்றுச் சட்டங்களை மீறும் செயற்பாடாகும்.

அவ்வாறு செயற்பட்டிருந்தால், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் இவ்விடயம் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். தற்போது அவர், கடற்படையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்' என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .