2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘நுகேகொடை பேரணியால் பாதிப்பில்லை’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்   

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில், அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியும் கலந்துகொள்ளமாட்டார் என்பதால், இந்தப் பேரணியால், அரசாங்கத்துக்கோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது” என்று, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில், நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,   
“ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள எமது கட்சியினரும் எமது நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால், மற்றைய சில தரப்பினரால், குழப்பங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன. எனவே, அரசாங்கத்தைச் சேர்ந்த எவரும், இந்தப் பேரணியில் கலந்துக்கொள்ளப் போவதில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமைகள் இல்லாவிடில், சு.கவை முன்னோக்கிக் கொண்டுச்செல்வது கடினமான காரியமாக இருந்திருக்கும். எமது வெற்றிப்பாதைக்கு, இந்த மூவரினதும் ஒற்றுமை அவசியமாகின்றது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .