2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘நாய்’ பிடிக்கும் ‘கமெரா’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில், நாய்களைக் கொண்டுவந்து விடுகின்ற நபர்களை, சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் கண்டறிந்து, அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்குவதற்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கவனஞ்செலுத்தியுள்ளார்.

விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   
நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அண்மையில், நாய்களை கொண்டுவந்து விடுவதனால் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக பிரதேசவாசிகள் முறையிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .