2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'போதைப்பொருட்களை கொண்டு வருவதை தடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது'

Niroshini   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் கடந்த காலங்களை விட முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் செயற்திறனாக முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது நாடு ஓர் அழகிய தீவாக காணப்பட்டபோதும், கடத்தல்காரர்கள் அதனை பிழையாகப் பயன்படுத்துவதாகின்றனர். இன்று வெளிநாடுகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருட்கள் எமது நாட்டுக்குக் கடத்தப்படுவது பாரதூரமானதொரு சவாலாக மாறியுள்ளதெனத் தெரிவித்தார்.  

நேற்று (12) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மதுவிலக்கு விருது விழாவில் உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

கடந்த காலங்களில் நாட்டில் புகைபிடித்தல் ஒப்பீட்டு ரீதியாகக் குறைவடைந்துள்ள போதிலும் போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். போதைப்பொருள், போதை மாத்திரைகள் போன்றே சட்டவிரோத மதுசாரங்கள் இன்று பாடசாலைகளுக்கு அண்மையிலும் கிராமங்களிலும் வியாபிக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தடுப்பதற்காக அரசாங்கம் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் மாத்திரம் வெற்றிகொள்ள முடியாது. சமூகத்தில் பொறுப்புவாய்ந்த அனைவரினதும் கூட்டுப் பொறுப்பான இதனை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X