2025 மே 19, திங்கட்கிழமை

'போதை மருந்து விற்றால் உடனடியாக அறிவிக்கவும்'

Thipaan   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களை இலக்குவைத்து போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைக்குமாயின், அவைதொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸ் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் நடத்தப்படும் இடங்களுக்கு அண்மையில், மாணவர்களை இலக்கு வைத்து பல்வேறு வகையான போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக நாடளாவியரீதியில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில்,

பொலிஸாரினால் பல்வேறு இடங்களில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறான தகவல்களின் அடிப்படையில், மொறட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட் ராவனாவத்த பிரதேசத்தில் பிரபல்யமான பாடசாலைக்கு அருகில் போதையூட்டும் மருந்து விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கடந்த 21ஆம் திகதி திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவ்விடத்தில் இருந்த மருந்தகத்தில் இருந்து, போதையூட்டும் குளிசைகள் 8,000 கைப்பற்றப்பட்டன. இந்த குளிசைகள், போதைப்பொருளுக்கு அடிமையானர்கள், போதைப்பொருளுக்குப் பதிலாக பயன்படுத்தும் குளிசையாகும்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மருந்தகத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையில், மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான போதையூட்டும் மருந்துகள் விற்கப்பட்டால் அவை தொடர்பில் பெற்றோர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான போதையூட்டும் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்குமாயின் அவைதொடர்பிலும் தகவல் தருமாறும் அவ்வறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X