2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'புதிய திகதிகள் அறிவிக்கப்படும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19ஆவது சார்க் மாநாட்டுக்கான புதிய திகதிகள், நேபாளத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் 9,10ஆம் திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக, பாகிஸ்தானின் வெளிவிகார அமைச்சு, வெள்ளிக்கிழமை (30) அறிவித்திருந்தநிலையிலேயே புதிய திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டை நடத்துவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் இல்லாததால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என, எட்டு அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சார்க் அமைப்பிலுள்ள இலங்கை உட்பட ஐந்து நாடுகள் தெரிவித்ததையடுத்தே, பாகிஸ்தான், ஒத்திவைப்பதாக அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .