Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்த நிலையில், 92 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார்.
இதில், 12 பரீட்சார்த்திகள், விடைத்தாள்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏனைய 80 பரீட்சார்த்திகளும், பின்தங்கிய பிரதேசங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்றியவர்கள் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.
பின்தங்கிய மாகாணங்களின் கோட்டாவின் ஊடாக, பல்கலைக்கழகங்களுக்கான தகுதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வசதி வாய்ப்புகளை கொண்ட பிரதேசங்களிலிருந்து பின்தங்கிய பிரதேசங்களுக்குச் சென்று பரீட்சைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பெறுபேறுகளே, இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு உயர்த்தரப் பரீட்சை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, இந்த விடயம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வியமைச்சு ஆகியன இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தது.
அவ்வாறு, வெளிமாவட்ட மாணவர்களைப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பமளித்ததாகக் கூறப்படும் அதிபர்கள் இருவர், கடமைகளிலிருந்து விலக்கப்பட்டனர் என்றும் கல்வியமைச்சு அறிவித்திருந்தது.
எனினும், இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட 12 அதிபர்களுக்கு எதிராக இதுவரையிலும் சட்டரீதியிலான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 80 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளே இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர், முறைகேடானமுறையில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago