2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பேரறிவாளனை விடுவிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை'

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர்களை  விடுதலை செய்ய வேண்டும்” என,  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வரை நேற்று  சந்தித்தப்போது, அற்புதம்மாள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்  செல்வி. ஜெயலலிதா, தனது மகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக இரண்டு முறை அறிவித்த போதிலும், அது தடைப்பட்டதாகவும், இனிமேலும் அவர்களின் விடுதலைக்கு தடை ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

தமது மகனான பேரறிவாளன், தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரை விடுதலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் முதல்வரிடம், அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தாம் ஆலோசித்து வருவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தன்னிடம் கூறியதாகவும், முதல்வர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .