2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'பொலிஸாரில் தவறில்லை'

George   / 2017 ஜனவரி 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பொலிஸார் குறைந்த பலத்தை பிரயோகித்து கலைத்ததில் எந்தவித தவறும் இல்லை. பொலிஸார் முற்கூட்டியே செயற்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டும்' என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

'பொதுமக்களை கலவரத்தில் இருந்து பாதுகாக்கும் கடடை பொலிஸாருக்கு உண்டு. அதற்காக அவர்களால் குறைந்த பலத்தை பிரயோகிக்க முடியும். ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கNவு பொலிஸார், கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .