2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மனைவியை தள்ளிவிட்டு கணவனும் குதித்தார்'

Kanagaraj   / 2017 ஜனவரி 09 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டிலிருந்து தனது மனைவியை அடித்து அடித்து இழுத்துவந்து, களனி கங்கைக்குள் தள்ளிவிட்;ட கணவன் தானும் கங்கைக்குள் குதித்த சம்பவமொன்று களனியில் கடந்த 8ஆம் திகதியன்று இரவு இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இவ்விருவரும் பலியாகியுள்ளனர். அவர்களுடைய ஒருவயதான குழந்தை அனாதையாக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

குடும்பப் பிரச்சினை முற்றிய நிலையில், அன்றிரவு தனது மனைவியை அடித்த கணவன், அவரை இழுத்துக்கொண்டு சேதவத்த பகுதியில் வைத்து களனி கங்கைக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன் பின்னர், அவரும் கங்கைக்குள் பாய்ந்துள்ளார். இவ்விருவரும் பலியாகியுள்ளனர்.

மாத்தளை பிட்டக்கந்தவத்தை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சுதந்தரலிங்கம் பாக்கியராஜா (வயது 28), அவருடைய மனைவியான ராஜகோபால் பானுமதி ( வயது 25) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

கணவனுக்கு இது இரண்டாவது மனைவி என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னுடைய மனைவி, ஊரில் இருக்கையில் குறித்த சந்தேகநபர், இந்தப் பெண்ணுடன் பழகி, கொழும்புக்கு அழைத்துவந்து சேதவத்தை பகுதியில் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.

அவ்விருவருக்கும் இடையில், அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெற்றமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு உள்ளதாக தெரிவித்த பொலிஸார், அநாதையாக விடப்பட்ட குழந்தையை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .