Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மார்ச் 08 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
வழமைபோலவே, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது சூடுபிடித்திருக்கும் நாடாளுமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தின் போதும் சூடுபிடித்திருந்தது.
பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேணையை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான இரா.சம்பந்தன் சமர்ப்பித்து உரையாற்றினார்.
பின்னர் உரையாற்றிய, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் போனதாக கூறப்படுவோர் புலிகள் என்றும், அவர்களை புலிகளே காணாமல் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியது மட்டுமன்றி, காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவையும் ஒரு புலியாகவே சித்திரித்தனர்.
இதற்கிடையில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 'நாட்டையும் இராணுவ வீரர்களையும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர காட்டிக்கொடுத்துவிட்டார். காணாமல்போனதாக கூறப்படுவர்களில் பலர், ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர்' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.
இதனால், சுமந்திரன் எம்.பியும், அமைச்சர் மங்களவும் தினேஷ் குணவர்தனவுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். தினேஷுக்கு ஆதரவாக, கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் இனவாதக் கோஷம் எழுப்பினர். இவ்வாறான வாய்ச்சண்டை,
புலிக்கோஷத்துக்கு மத்தியில், அவை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம், மாலை 6.40 மணிக்கு நிறைவடைந்தது.
இதேவேளை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரிடம், புத்திக பத்திரண எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்கு, அமைச்சர் காமினி ஜயவிக்ரம அளித்த பதில், அவை நடவடிக்கைகளை சுவாரஷ்யப்படுத்தியது.
ஒரு சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, 'அவ்வாறு செய்யமுடியுமா?' என்று மூக்கின்மேல் விரலை வைத்துக் கேட்கும் வகையில் அமைச்சரின் பதில் அமைந்திருந்து.
இடையீட்டு கேள்விகள் மூன்றையும் கேட்டே முடிக்கும் புத்திக பத்திரண, 'களுகங்கை முதலைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான யுத்தம் அதிகரித்துள்ளது. அவற்றைத் தடுக்க முதலைகள் சரணாலயத்தை அமையுங்கள்' என யோசனையொன்றை முன்வைத்தார்.
மிகவும் இலாவகமாக பதிலளித்த அமைச்சர், 'முதலைத் தொல்லை, குரங்குத் தொல்லை, மயில்த் தொல்லை, காட்டுப்பன்றித் தொல்லை என்று தொல்லைகளை அடுக்கிக்கொண்டே போவீர்கள், முதலை வளர்ப்பதற்கு விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்' என்றார். இதன்போது அவையிலிருந்த சகலரும் வாயடைத்துப் போய்விட்டனர்.
புத்திக பத்திரண எம்.பி, ஹம்பாந்தோட்டையில் அநாதரவாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் பற்றியே கேட்டிருந்தார். அங்கு 300க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான மான்களும் அநாதரவாக சுற்றிதிரிகின்றன என்று பதிலளித்த அமைச்சர், விலங்குகளைப் பாதுகாக்குமாறு மக்களுக்கு சொல்லுகின்றேன். சோலார் பவர் பொருத்தி, கம்பிகளை அமைத்து, விலங்குகள் வராமல் ஒருவர் தடுத்துள்ளார். அது சிறந்த செயற்பாடாகும். இவ்வாறான நிலையில், ஹம்பாந்தோட்டையில் அநாதரவாகத் திரியும் காட்டுயானைகளுக்கு என்ன செய்வதென்று சகலரும் கூடிப்பேசுவோம். ஏயார் பஸ்களைத் தந்தால், அதில் யானைகளை ஏற்றி எங்கேயாவது கொண்டு விட்டுவிடுவேன் என்றார்.
குறுக்கிட்ட சபாநாயகர், 'ஆங்... யானைகளை அப்படி ஏற்றமுடியுமா?' என வினவுகையில், 'சபாநாயகரே, எப்படியாவது ஏற்றிக்கொண்டு சென்றுவிடுவேன், அவ்வளவு பெரிய எயார் பஸ் வேண்டும்' என்றார். இதன்போது அவையிலிருந்த சலரும் கெக்கென்று சிரித்துவிட்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago