2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘விற்பனை ஆண்டு பிரகடனம்’

Gavitha   / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிறந்துள்ள 2017ஆம் ஆண்டு, விற்பனை ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது” என, ஒன்றிணைந்த எதிரணி ​தெரிவித்தது.  

மாத்தறையில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, “ஹம்பாந்தோட்டைத் துறைமுக விற்பனையானது, இவ்வாண்டின் தொனிப்பொருளை, உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.  

“இந்த அரசாங்கத்தின் ​வேலைத்திட்டங்கள் தொடர்பில், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நல்லாட்சி என்று முத்திரை பதித்துக்கொண்ட இந்த அரசாங்கம், இந்த 2017ஆம் ஆண்டை, விற்பனை ஆண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“இந்தப் பிரகடனம், உத்தியோகபூர்வமாக இல்லாவிடினும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், இந்தப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்றன” என்று, அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .