Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கைக்கு 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பெப்ரவரி 01 முதல் 10 வரை மொத்தம் 31,343 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன்படி பெப்ரவரி மாதத்திற்கான தினசரி சராசரி வருகை எண்ணிக்கை 3,134 ஆகப் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை 4,566 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக 3,799 சுற்றுலாப்பயணிகள் இங்கிலாந்திருந்து வருகை தந்துள்ளனர்.
இதுவரை இரண்டாவது இடத்திலிருந்த இந்தியாவிலிருந்து 3,575 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது தவிர ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
47 minute ago
59 minute ago