2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

11 மணித்தியாலங்களில் 13 வெடிப்புகள் பதிவு

Freelancer   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (21) 11 மணித்தியாலங்களில் 13 வாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம, தம்பகல்ல, ஹதரலியத்த, வலஸ்முல்ல, கணேமுல்ல, மீகலேவ, தும்மலசூரிய, வீரவில, கம்புறுபிட்டிய, கடவத்தை, கிரிபத்கொட, பல்லேகல மற்றும் நவகமுவ ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நவம்பர் 01 ஆம் திகதி முதல் இன்று (21) வரையான கடந்த 50 நாட்களில் மொத்தமாக 860 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .