2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

‘11 மாணவர்கள் கடத்தல் விவகாரம் வசந்த கரன்னாகொட பொறுப்புக் கூற வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் சுமித் ரணசிங்க ஆகிய இருவரும்  பொறுப்புக் கூற வேண்டுமென, ஓய்வுப்பெற்ற ரியர் அட்மிரல் சியாமல் பெர்ணான்டோ வாக்குமூலம் வழங்கியுள்ளதாக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜீவனி பத்தேகலவிடம் தெரிவித்துள்ளனர்.

வசந்தா கரன்னாகொடவின் கீழ் சேவையாற்றிய அவரது செயலாளரே இந்த சம்பவத்தின் சாட்சியாளர் என்றும் ரியர் அட்மிரல் சியாமல் பெர்ணான்டோ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்தை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் ஜீவனி பத்தேகல உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X