S. Shivany / 2020 நவம்பர் 09 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 மாவட்டங்களில் நேற்று (08) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென, கொவிட்-19 வைரஸை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கமைய, நேற்று (08) கொழும்பு மாவட்டத்தில் 213 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 143 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 183 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும், காலியில் 09 பேரும், களுத்துறையில் 06 பேரும் , கேகாலையில் நால்வரும், கண்டியில் மூவரும், நுவரெலியாவில் இருவரும், பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago