Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) பாடசாலையில் நடந்துள்ளது.
பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளதோடு மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற போது அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை .
இந்த நிலையில் அப்பகுதியில் இயங்கும் பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை அதிபர் மற்றும் மாணவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குறித்த மாணவனின் குடும்பத்தினர் எருக்கலம் பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் அங்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இல்லை என அறிவிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அதிபரால் குறித்த துஷ்பிரயோகம் இடம் பெற்ற போதிலும் அதிபர் சார்பாக சிலரின் அழுத்தம் மற்றும் சில நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்த படவில்லை என தெரிய வந்துள்ளது.
இருப்பினும் குறித்த விடயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலைப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago