2024 மே 25, சனிக்கிழமை

18 சதம் நிலுவைக்கு மின் இணைப்பு துண்டிப்பு

Editorial   / 2024 ஜனவரி 29 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டண பட்டியலில் நி​லுவையில் இருந்த 18 சதத்தை செலுத்தாமையால் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று தெற்கில் இடம்பெற்றுள்ளது.

  காலி கல்வடுகொடவைச் சேர்ந்த  விசும் மாபலகம என்பவரின் வீட்டின் மின்னிணைப்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

  காலி நகருக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும் (Lanka) Electricity Private Company Limited (LECO) நிறுவனத்தினால்  மாபலகமவின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

6650 ரூபாய் 18 சதமாக  இருந்த மின்கட்டணத்தை கட்ட லெகோ அலுவலகத்திற்குச் சென்றபோது 18 சதத்தை கட்ட வேண்டுமா எனக் கேட்டபோது, ​​மின்சாரம் இருப்பதால் அதைச் செலுத்தாமல் இருப்பது பிரச்சினையில்லை என்று காசாளர் கூறியதாக  விசும் மாபலகம கூறுகிறார்.  

   ரூ.6650  செலுத்தப்பட்டு மீதமுள்ள  18 சதம் செலுத்தப்படவில்லை. இந்த கட்டணத்தை 19-12-2023 அன்று   செலுத்தியுள்ளார்.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், (Lanka) Electricity Private Company Limited (LECO) ஊழியர்கள் வீட்டுக்கு வந்து மின்சாரத்தை துண்டித்துவிட்டதாக மாபலகம  கூறினார்.

சில மணி நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றபோது, ​​வீட்டின் முன் மின் வெட்டு அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்ததாகவும், கூடுதல் கட்டணமாக  1,231 ரூபாயும் மற்றும் மின்வெட்டு நிலுவையில் உள்ள  18 சதத்தையும் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி விசாரிப்பதற்காக அவர் மின் கட்டணம்  செலுத்திய அனைத்து ஆவணங்களுடன் காலி ரிச்மண்ட் ஹில்லில் உள்ள (Lanka) Electricity Private Company Limited (LECO) அலுவலகத்திற்குச் சென்றபோது தெளிவான பதில் கிடைக்கவில்லை.

  அப்போது அங்கு வந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலகத்தில் மின் பொறியாளர் உட்பட பொறுப்பான ஆள் இல்லை எனக் கூறினார். இதன் காரணமாகவே அந்த இடத்தில் ஆவேசமாகப் பேச நேர்ந்ததாகவும் அதற்குப் பொறுப்பானவரின் தொலைபேசி இலக்கம் கூட வழங்கப்படவில்லை என்றும்  மாபலகம கூறுகிறார்.

இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றதும், LECO  நிறுவன அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தானும், அதிகாரிகளும் சேர்ந்து கடும் தவறு செய்து விட்டதாக கூறினார் என்றும் மாபலகம கூறினார்.

தற்போதைய கணினி மயமாக்கப்பட்ட முறையின் படி ஒரு சதம் அல்லது அதற்கும் குறைவான மின் கட்டணத்தை செலுத்தாவிடின்? மின் இணைப்பை துண்டிக்கும் முறை உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், 10,000.00 ரூபாய்க்கு மேற்பட்ட கட்டணங்கள் செலுத்தப்படாவிடின் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.  

இதுகுறித்து LECO நிறுவனத்திடம் கேட்டபோது, ​​போனில் பதிலளித்த அதிகாரி ஒருவர் தவறிழைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அன்றைய தினமே மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .