2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

2 ஆவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியளவிலான நிதி மோசடி மற்றும் ஊழல் குறித்த வழக்குகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய, இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம், நீதி  மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றிவரும் ஆர்.குணசிங்க, அமல் ரணராஜா, சசி மஹேந்திரன் ஆகியோரே இதில் கடமையாற்றவுள்ளனர்.

பாரியளவிலான நிதி மோசடி மற்றும் ஊழல் குறித்த வழக்குகளை விசாரணை செய்வதற்காக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றங்கள் மூன்றை அமைத்து, வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக அமைச்சரவை வழங்கியிருந்த அனுமதிக்கமைய, 2 ஆவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .