2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

2 தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி

Editorial   / 2026 மார்ச் 29 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.

முதல் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் இந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்.

முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் உத்தரவாதங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை விஜய் வெளியிட்டார். அதில் சில முக்கிய அறிவிப்புகளை குறிப்பிட்டிருந்தார்.

விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

  • போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
  • 20 லட்சம் வரை பிணையம் இல்லா கடன் உத்தரவாதம் கொடுக்கப்படும்.
  • அனைத்து மாநில அரசு பணியிடங்களுக்கும் ஆட்சேர்ப்பு கால அட்டவணை வெளியிடப்படும்.
  • அனைத்து ஆட்சேர்ப்பு பணிகளும் 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும்.
  • ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் உருவாக்கப்படும்.
  • வெற்றி தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த 75% பணியாளர்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு
  • தமிழ்நாடு படைப்பாளர் தொழில்முனைவு திட்டம் - 1,50,000 படைப்பாளர்களுக்கு தொடக்க மூலதனம் வழங்கப்படும், 500 படைப்பாளர் பள்ளிகள் நிறுவப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .