2025 ஜூலை 30, புதன்கிழமை

2 மீனவர்களை காணவில்லை

Freelancer   / 2025 மார்ச் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். ஊர்காவற்றுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸ் என்பவரின் படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், அந்த இருவரில் எவரும் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .