S.Renuka / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (03) இரவு எயார் இந்தியா விமானம் புறப்பட தயாரானது.
விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுதளத்தில் இருந்து விமானத்தை நிறுத்தும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, இரு விமானங்களின் வலது பக்க இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதியதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு விமானங்களின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு காரணமாக இரு விமானங்களும் உடனடியாக விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டன.
6 minute ago
11 minute ago
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
19 minute ago
35 minute ago