2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திர வெளியீடு: 20இல் அறிக்கை சமர்ப்பிப்பு?

Gavitha   / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திர வெளியீடு தொடர்புடைய கோப் குழுவின் அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினரொருவர் தெரிவித்தார். 

கோப் குழுவின் அனைத்து அங்கத்தவர்களும் உடன்பட்டால், குறித்த அறிக்கை 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அங்கத்தவர்களுக்கிடையிலான கலந்துரையால், புதன்கிழமை (05) அன்று இடம்பெறும் என்றும் அந்த கலந்துரையாடல் மூன்று நாளைக்கு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திர வெளியீடு தொடர்புடைய கோப் குழுவின் அறிக்கை, 13ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .