2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மீறியிருந்தால் ‘எம்.பிக்களை பிடிப்போம்’

Gavitha   / 2017 ஜனவரி 10 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில், சட்டத்தை மீறும் வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு, சட்டத்தை மீறியிருந்தால் அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி, தெரிவித்தார். 

பொலிஸ் திணைக்களத்தின் புதிய கொள்கை தொடர்பில், பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

கேள்வி: ஹம்பாந்தோட்டையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பதற்ற நிலையின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கைத் தொடர்பில், ஊடகங்களில் பல விதத் தகவல்கள் வெளிவந்தன. பொலிஸாரின் தலையீடு இன்மையால்தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன? 

பதில்: இதற்கு, முன்னர் காணப்பட்ட தவறான தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊடக கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக, 24 மணித்தியாலங்களும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி: ஹம்பாந்தோட்டை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுவிட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறியவர்களில் அரசியல்வாதிகளும் உள்ளனர். அவர்களைக் கைதுசெய்யவில்லையா? 

பதில்: இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். சட்டத்தை மீறி செயற்பட்ட சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.


  Comments - 0

  • ஜெயமணி வில்சன் Wednesday, 11 January 2017 04:35 AM

    துணிவான பேச்சு.... பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயகொடிக்கு எனது பாராட்டுக்கள். சட்டத்தை அமுல்படுத்தினால் மட்டும் போதுமானது. அப்போது அரசியல்வாதிகளின் குழப்பும் திட்டம் முடிவுக்கு வரும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .